Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 27.12.2023

Advertisements
மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே நம்பிக்கைக்கு உரியவர்களுடனான சந்திப்பு நிகழும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நீங்க வழி கிடைக்கும். நல்ல செய்தியாக புதிய தகவல் ஒன்று வந்து சேரும். மேலும் இன்று முழு முருகப்பெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமைய இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

ரிஷபம்

கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த ஈகோப் பிரச்சினை நீங்கும். சொத்து தொடர்பான குழப்பங்கள் நீங்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மேலும் இன்று சிவபெருமானை வணங்கி வர மனச்சோர்வை நீங்கி இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 2.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைபட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்கவும். சகோதரர்கள் உதவுவர். எடுத்த காரியம் முடிக்க முயற்சிகள் அதிகமாக தேவைப்படும். மேலும் இன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

கடகம்

 

கடக ராசிக்காரர்களே இதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மேலும் இன்று குரு பகவானே வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை சாதிப்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து, புதுப்பிக்க திட்டமிடுவீர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் இருக்கும். மேலும் இன்று வைர சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு உணவுப்பழக்கத்தில் எச்சரிக்கை தேவை. இன்று பைராகி தேவி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே இனம் தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்தால், மனம்விட்டுப் பேசிக் கொள்வது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகவும். அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வருவது மன அமைதியை கொடுக்கும் மேலும் தியானம் உங்கள் மனதை சாந்தமாக்கும். மேலும் இன்று சரஸ்வதி தேவியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே நீண்டநாள் எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். பணவரவு திருப்தி தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள், ஆதாயமடைவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட யோகம் உண்டு. எதையும் தனியாக நின்று சமாளிப்பீர்கள். மேலும் இன்று வீரபத்திரரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். மற்றவரின் உணர்வை புரிந்து கொள்வீர்கள் கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டு. சுப செலவுகள் ஏற்படும் நண்பர்கள், உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். மேலும் இன்று முருகனை வழிபட இனிமையான நாளாக அமையும் இன்று அதிர்ஷ்ட எண் 9.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம். வாக்கை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் இன்று குரு வழிபாட்டால் இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 2.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் மலரும் நினைவாய் அமையும் பழைய  சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டார பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் சொந்த பிரச்சினைகளைக் கூற வேண்டாம். மேலும் இன்று நவகிரக வழிபாட்டால் இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே உணர்ச்சி வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கண் சம்பந்தமான கோளாறு வந்து நீங்கும். ஆன்மிகம், தியானத்தில் மனம் லயிக்கும். இன்று விநாயகரை வழிபட இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 8.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களே எதையும் அதிகம் சிந்திக்க வேண்டாம்.கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த ஈகோப் பிரச்சினை நீங்கும். சொத்து தொடர்பான குழப்பங்கள் நீங்கும். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தியானம் மற்றும் யோகா செய்ய மன அமைதி கிட்டும். மேலும் இன்று ரங்கநாதரை வழிபட இனிமையான நாளாக அமையும்இன்றைய அதிர்ஷ்ட எண் 3.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *