கேரள கோயில் ஏரியில் புதிய முதலை.! புகழ்பெற்ற பாபியா இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு புதிய முதலை கண்டுபிடிப்பு…!
கேரளாவில் உள்ள அனந்தபுரா ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோயில் ஏரியில் புதிய முதலை ஒன்று காணப்பட்டது. கேரளாவில் உள்ள அனந்தபுரா ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் பக்தர்களால் வணங்கப்பட்ட பாபியா முதலையைப் போலவே அது இறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு புதிய முதலை ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது.
பாபியா தெய்வத்திற்கான காணிக்கைகளை சாப்பிடுவதாகப் பக்தர்கள் நம்பினர். தினசரி பாபியாவைக் காண பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம்.பாபியாவின் மறைவுக்குப் பின் முதலை இருப்பது கடவுள் செயல் என்றும் நம்புகின்றனர்.
நவம்பர் 8, 2023 அன்று ஒரு குடும்பம் முதலையைப் பார்த்ததாகக் கூறியதைத் தொடர்ந்து கோயிலின் தலைவர் உதய் குமார் கட்டி புதிய முதலை ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தினார்.
ஆரம்பத்தில் சமூக ஊடகங்கள் முதலயைப் பார்த்ததாகக் கூறிய குடும்பத்தினரை கேலி செய்து விமர்சனங்கள் கூறினர். ஆனால் அது இப்போது நிரூபணமாகிறது. 1945-ல் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் அந்த ஏரியில் இருந்த முதலையைச் சுட்டார். அதன் பிறகு வேரு ஒரு முதலை இருந்தது அதன் பெயர் பாபியா.
அது கடவுளின் அவதாரமாகப் பக்தர்களால் கருதப்பட்டது. சமீபத்தில் ஏரியில் காணப்படும் புதிய முதலை போட்டோக்களைச் சென்னையில் உள்ள முதலை ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பியதில் அது இறந்து போன பாபியா தன்மைகள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புது முதலைக்குப் பக்தர்கள் இதுவரை சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை என்றும் இதுகுறித்து வனத் துறைக்கும் அறிவித்ததாகத் தெரிவித்துள்ளது. கோவில் கமிட்டி மீட்டிங் நடத்தி இறந்த பாபியா போல அற்புதங்கள் செய்யுமா என விவாதிக்க உள்ளதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.