Anaimaduvu Dam: ஆணை மடுவு அணையிலிருந்து நேரடி ஆற்றுப் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

Advertisements

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆணை மடுவு அணையிலிருந்து வாய்க்கால் மற்றும் நேரடி ஆற்றுப் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது, இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 6 மழையில் உற்பத்தியாகும் வசிஷ்டர் நதியின் குறுக்கே புழுதி கொட்டை கிராமத்தில் 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.83 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணைஅமைந்துள்ளது.

இந்த அணையால் குறிச்சி நீர்முள்ளி குட்டை, கோளாத்து கோம்பை, சின்னப்ப நாயக்கன்பாளையம், சந்திரா பிள்ளை வளர்ச்சி உள்ளிட்ட கிராமங்களில் 511 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வேலூர் குறிச்சி கொட்டவாடி அத்தனூர் பட்டி ஏரிகளும் ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீர் ஆதாரமும் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் இரண்டு மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது எனவே ஆணை முடிவு அணையில் தேங்கி வைக்கப்பட்டுள்ள, தண்ணீரை சிறப்பு அனுப்பி வாய்க்கால் மற்றும் நேரடி ஆற்றுப் பாசனத்திற்கு பாசனத்திற்கு வசிஷ்டநதியிலும் திறந்து விட வேண்டும் எனப் புதிய ஆயகட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயகட்டு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

இதை எடுத்து  வியாழக்கிழமை இன்று தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வலது வாய்க்காலில் வினாடிக்கு 35 கன அடி வீதமும் இடது வாய்க்காலில் வினாடிக்கு 15 கன அடி விதமும் மொத்தம் வினாடிக்கு 50 கன அடி நாள் ஒன்றுக்கு 4.32 மில்லியன் கன அடி விதம் நான்கு நாட்களுக்கு மொத்தம் 17.28 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கவும் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி விதம் நாள் ஒன்றுக்கு 4.32 மில்லியன் கன அடி மொத்தம் 21.60 மில்லியன் கன அடி தண்ணீர் அணையில் தலைமை மதகு வழியாக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகளுக்கு வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர்  இரா.பிருந்தாதேவி  உத்தரவின் பேரில் வியாழக்கிழமை காலை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன் உதவி செயற்பொறியாளர் கீதா ராணி உதவி பொறியாளர் கோகுல் ராஜா மற்றும் பாசன வசதி விவசாயிகள் தண்ணீர் திறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *