அம்பாலா விமானப்படைத் தளத்தில் திரௌபதி முர்முக்குச் சிறப்பான வரவேற்பு.!

அரியானாவில் உள்ள விமானப்படைத் தளத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளார். அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப் படைத் தளத்துக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றுள்ளார்.

அங்கு விமானப்படைத் தளபதியும் அதிகாரிகளும் அவரை வரவேற்றனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்த ஜீப்பில் சென்றபடி விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இராணுவச் சீருடை அணிந்த திரௌபதி முர்மு போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார். அவருடன் விமானப்படைத் தளபதிஅமர் பிரீத் சிங்கும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *