
விமானத்தில் நடிகைக்குப் பாலியல் சீண்டல்!
திருவனந்தபுரம்: மும்பை-கொச்சி ஏர் இந்தியா விமானத்தில் மலையாள இளம் நடிகையிடம் பயணி ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் கொச்சி போலீசில் புகார் செய்தார். பிரபல மலையாள இளம் நடிகை ஒருவர் நேற்று மாலை மும்பையிலிருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அவரது இருக்கை அருகில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென இளம் நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
பலமுறை கண்டித்தார், குடிபோதையில் இருந்ததால் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடிகையைத் தொந்தரவு செய்துள்ளார். உடனே விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். ஆனால் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகையை வேறு இருக்கையில் அமர வைத்துள்ளனர். இதையடுத்து விமானத்திலிருந்து இறங்கியவுடன் இ-மெயில் மூலம் கொச்சி போலீசில் இளம் நடிகை புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தகவலை இளம் நடிகை, தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.

