Agnibaan Rocket: “அக்னிபான்” ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படாது!

Advertisements

‘ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்’ அக்னிபான் ராக்கெட்டை தயாரித்தது.

செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஏவுதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில்முனைவோரால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்து முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட, ‘ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்’ தயாரித்த ‘அக்னிபான்’ ராக்கெட் நாளை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்னிபான் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப கோளாறு சீரான பிறகு, விண்ணில் ஏவப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *