
கருங்கடல் வழியாகக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 2.1 சதவிகிதம் விலை கூடியுள்ளது. அனைத்து தரப்பு மக்களாலும் விலை அதிகம் கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத நிலையினால், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பசிப் பிணியினால் உழலும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது…
உலகிலேயே அதிக சுறுசுறுப்பான இறக்குமதியாளர்களைக் கொண்ட நாடு ஆப்பிரிக்கா. இன்றைய உலக மயமாக்கப்பட்ட உலகில் சர்வதேச வர்த்தகம், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானதாக உள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளின் இறக்குமதிகள் அவற்றின் பொருளாதாரத்தின் நிலையைக் காட்டுகிறது.
சுமார் 25 ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யாவிலிருந்து தான் கோதுமையை இறக்குமதி செய்கிறது.

ரஷ்ய கோதுமை இறக்குமதியில் ஆப்பிரிகாவின் சார்பு மற்றும் அரசியல் ராணுவ முடிவுகளைப் பாதிக்கும். சில ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யாவின் கோதுமையை நம்பியிருக்கின்றது. ரஷ்ய-உக்ரைன் போரினால் உணவுப் பொருட்களின் விலை சிகரத்தை எட்டியது.

கருங்கடல் வழியாகக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 2.1 சதவிகிதம் விலை கூடியுள்ளது. அனைத்து தரப்பு மக்களாலும் விலை அதிகம் கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத நிலையினால், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் பசிப் பிணியினால் உழலும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளின் இறக்குமதி உள் நாட்டு தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை.

வர்த்தகப் பாதை மாற்றமே காரணம். மொத்தமுள்ள தேவையில் மிகச் சொற்ப அளவிலான இறக்குமதி செய்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
உணவுப் பொருளில் தொடங்கி, மருந்துகள், மின் பொருட்கள், எரி பொருட்கள், வாகனங்கள், மற்றும் இயந்திரங்கள் போன்ற அனைத்து பொருட்களின் இறக்குமதி ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.
இதற்கு யார் பொறுப்பு … என்ன தான் முடிவு…
வழிவிட்டால் வழி உண்டு…


