அதிமுக அதிரடி வேட்பு மனு: யார் யார் எங்கெங்கு போட்டி?

Advertisements

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் விருப்ப மனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விருப்ப மனு தொடர்பாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே 1,237 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டுமென 349 பேர் விருப்ப மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இது தவிர , முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் போன்றோரும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் யார் யார் எந்தெந்த தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றிய விரிவான தகவலை இப்போது பார்க்கலாம். பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் அரசியல் கட்சிகள் தங்கள் தொண்டர்களிடமிருந்தும் நிர்வாகிகள் இடமிருந்தும் விருப்ப மனுக்கள் பெறுவார்கள் .

ஆனால் இந்த முறை மூன்று மாதத்திற்கு முன்பாகவே அதிமுக அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சி காங்கிரஸ் உள்ளிட்டவை விருப்ப மனுக்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்த வகையில்,  அதிமுக சார்பில் தமிழகத்தில் போட்டியிட விருப்பமனு கட்டணம் ரூ.15,000 அறிவிக்கப்பட்டுள்ளது புதுச்சேரியில் விருப்பமனு கட்டணம் 5000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.  வருகிற 23ஆம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு , புதுச்சேரி , கேரளா சட்டசபை தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே 1237 பேர் விருப்ப மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள்.  இதில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டுமென 349 பேர் விருப்பமனுக்ககள் கொடுத்து இருக்கிறார்கள். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம் காமராஜ் உள்ளிட்ட 888பேர் தாங்கள் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ள சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி மாதவரம் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்துள்ளார். அதிமுக எம்பி தனபால் மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக அவரது மனைவி காயத்ரி தனபால் விருப்பமனு அளித்திருக்கிறார்.

வேளச்சேரி மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் எம் எ மூர்த்தி வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார்.  விழுப்புரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ் கோகுல்ராஜ் வானூர் திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார் முன்னாள் எம்எல்ஏ முருகுமாரன் காட்டுமன்னார்கோவில் திட்டக்குடி தொகுதிகளில் போட்டியிட மனு கொடுத்திருக்கிறார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி கே வைரமுத்து திருமயம் அறந்தாங்கி தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு கொடுத்து இருக்கிறார் . மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் பா. சரவணன் மதுரையில் 10 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார் .

முன்னாள் அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேட்பு மனு கொடுத்துள்ளார். இதில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் சி.வி சண்முகம் முன்பு விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  இந்த நிலையில் தற்பொழுது விழுப்புரத்திற்கு பதிலாக மயிலம் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பமனு கொடுத்திருக்கிறார்.

சிவி சண்முகத்தை பொறுத்தவரையில் விழுப்புரம் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனால் அதன் பிறகு நடைபெற்ற விழுப்புரம் சட்டசபை தேர்தலில் சீவி சண்முகம் தோல்வியடைந்தார்.

இதனால்தான் சிவி சண்முகம் தற்பொழுது , மகிலம் தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கிறார் இந்த மயிலம் சட்டசபை தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் தான் இருக்கிறது . இந்த மயிலம் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் கேபி நாகராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதன் பிறகு 2016ல் திமுகவில் மாசிலாமணி வென்றார் கடந்த 2021 ஆம் ஆண்டில் பாமக சார்பில் சிவகுமார் வெற்றி பெற்றார்.

மயிலம் தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.  சி.வி சண்முகமும் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் . இந்த நிலையில் தான் அவர் வன்னியர் அதிகம் உள்ள மகிலம் தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கிறார் என தகவல் தெரிய வந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *