Admk Bjp Alliance :பாஜக – அதிமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் -தமிழிசை!

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார். அமைச்சர்கள் ஒன்பது பேர் ஊழல் செய்து மக்களின் பணத்தைச் சுருட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட தமிழிசை, திமுக அரசு தனது தோல்வியை மறைக்க மத்திய அரசைக் குற்றஞ்சாட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *