
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா,அக்டோபர் 4-ம் தேதி டேராடூனில் பேட்டி அளித்த நிலையில் அக்டோபர் 5-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களை சந்திக்க முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துருக்கங்க. இந்த விவகாரம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது
ஒரு வாரமாக தலைமறைவாக இருக்கும் இவர்கள, தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது . காவல்துறை.எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற இக்கட்டான சூழ்நிலையில, இவர்கள் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.ஆனால் அந்த மனுக்களையும் நீதிபதி ஜோதிராமன் அமர்வு, தள்ளுபடி செய்துள்ளது.
இது பபோதாது என்று கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த சில மணி நேரத்திலேயே அந்த பதிவை நீக்கி உள்ளார் . அதை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார்.
ஒரு சின்ன வார்த்தைகூட பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விடும், இவர்களென்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் டெல்லி சென்றிருக்காரு.அப்போது மத்திய உள்துறை
அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச முயற்சி செஞ்சதா சொல்லப்படுது.அதன் பிறகு, உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நடைபெறும் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்த பிறகு, டேராடூன் விமான நிலையத்தில உயர்நீதிமன்றத்தின் கருத்து குறித்து ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு நீதிக்காக போராடி வருவதாகவும் உண்மை வெளியே வரும் என்றும் ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்தார்.அந்த நீதிக்கான போராட்டமாக, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞரை சந்திக்க திட்டம் தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கு. அந்த வழக்கறிஞரிடம் கரூர் சம்பவம் தொடர்பாகவும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கறிஞரை சந்தித்த கையோடு, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒரு சிலரை சந்திக்கவும் ஆதவ் அர்ஜுனா முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த முக்கிய தலைவர்களில் ராகுல் காந்தியும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் சம்பவம் அரங்கேறிய சமயத்தில தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார் .
அவர்கள் நீண்ட கால நண்பர்கள் என்பதால் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளதா கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார். அதுவும் ராகுல் காந்தியை விஜய் சந்திக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் நிர்வாகிகளின் யார் தயவும் அவருக்கு தேவைப்படாது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
