
Actress Mrunal Thakur : இன்னும் நேரடியாகத் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் விரைவில் கோலிவுட் உலகில் களமிறங்க உள்ள பாலிவுட் நடிகை தான் மிருணாள் தாக்கூர்.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்த நடிகை தான் மிருணாள் தாக்கூர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே இவர் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணி செய்யத் தொடங்கினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஹிந்தி, தெலுங்கு மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ள தாகூர், இறுதியாக இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான விஜய் தேவாரகொண்டாவின் “தி ஃபேமிலி ஸ்டார்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
விரைவில் தமிழ் திரையுலகில் களமிறங்க உள்ள நடிகை மிருணாள் தாக்கூர், பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்க உள்ள காஞ்சனா திரைப்படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் சில தகவல்கள் வெளியானது.



