விவாகரத்தை அறிவித்துள்ள பிரபல நடிகை..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Bollywood , Tollywood தொடங்கி kollywood  வரை திரையுலகில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகின்றன. தனுஷ் – ஐஸ்வர்யா தொடங்கி , ரவிமோகன்- ஆர்த்தி , ஜீவி பிரகாஷ் – சைந்தவி , AR ரகுமான் – ஷைரா பானு வரை , அந்த வகையில் தற்போது பிரபல நடிகையும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா வாசுதேவன். இவர் தற்போது மூன்றாவது முறையாக விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார்.
நடிகை மீரா வாசுதேவன், விஷால் அகர்வால் என்பவரை முதலில் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2008ல் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

பின்னர் நடிகர் ஜான் கொக்கேனை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் 2016 ஆம் ஆண்டு பிரிந்தார்.இதையடுத்து சீரியல் ஒளிப்பதிவாளரான விபின் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்துள்ளதாக தற்போது மீரா அறிவித்துள்ளார். இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *