
Amala Paul : கல்லூரி விழா ஒன்றுக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்ததாக, நடிகை அமலா பால் மீது நெட்டிசன்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
கேரளாவில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்கள்மூலம் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கிய அமலா பால், தமிழில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான பிரபு சாலமனின் “மைனா” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வந்த அமலா பால், பிரபல இயக்குனர் ஏ.எல் விஜயை கடந்த 2014ம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2017ம் ஆண்டு விஜயை, அமலா பால் விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு பல ஆண்டுக் காலம் தனிமையில் வாழ்ந்த அமலா பால், கடந்த 2023ம் ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இந்தத் தம்பதிக்குக் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்தபிறகு ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் அமலா பால் கலந்து கொண்டார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலாபால், ஆபாசமான உடை அணிந்து வந்ததாக நெட்டிசன்கள் கூறிவந்த நிலையில், அதற்குப் பதிலளித்த அமலா பால் “நான் அணிந்த உடையில் ஆபாசம் இல்லை, உங்கள் கண்களில் தான் அதில் உள்ளது. நான் அந்தக் கல்லூரி விழாவிற்கு சென்றபொழுது அங்கிருந்த மாணவர்கள் யாரும் என் உடையைக் கண்டு தவறாக நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

