
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் தன்னுடைய அணியினருடன் கலந்து கொண்டார்.
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் தன்னுடைய அணியினருடன் கலந்து கொண்டார். அதில் ஒரு பிரிவில் மூன்றாவது இடத்தையும் பெற்று கோப்பையை வென்றார்.
இதைத்தொடர்ந்து துபாயில் இருக்கக்கூடிய மீடியாக்களுக்கு அஜித்குமார் பேட்டியளித்தார்.
அதில் ஒரு நேர்காணலில், தன்னுடைய கார் பந்தயப் போட்டிக்கு ஆதரவளித்த ரசிகர்கள், அரசு என அனைவருக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது பேசுகையில் தமிழக அரசுக் கார் பந்தயத்தை ஊக்குவிக்க முயற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு விளையாட்டுத் துறை கார் பந்தயங்களை ஊக்குவிக்கிறது.
அதற்காகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டு மற்றும் நன்றியைக் கூறி இருக்கிறார்.
அரசின் இந்த முயற்சி இந்தியாவில் கார் பந்தய வளர்ச்சிக்கும், ஆர்வத்தை உருவாக்குவதற்கு பங்காற்றுகிறது என்ன சுட்டிக்காட்டினார்.
அதேசமயம் இந்திய அளவில் மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் கார் ரேஸ் பந்தயத்தில் சாதனை படைத்திருக்கக்கூடிய கார்த்திக் நரேன், கருண் உள்ளிட்ட வீரர்களையும் சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளார் அஜித்குமார்.
