
ராமாபுரம், திருமலை நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் 37ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்…

சென்னை ராமாபுரம், திருமலை நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன்கோவிலில் 37ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது.நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாதரனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.மாலை நடைபெற்ற சுமங்கலி பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் தலைவர் ராமையா, ஏழுமலை, பாண்டிதுரை, ஆறுமுகம் பொன்தயாளன், ராஜசேகரன், மணிகண்டன், வேல்ராஜ், ஆகியோர்செய்திருந்தனர்.இன்று அம்மனுக்கு அபிஷேகம், சக்திகரகம் புறப்பாடு, மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது, கடைசித்திருநாளன நாளைக் காலை
சக்திகரகம் புறப்பாடு, மதியம்கூழ்வார்த்தல், அம்மன் வீதிஉலா மற்றும் அம்மனுக்கு கும்பம் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


