சென்னையில் ​கைத்தறி புட​வை​கள் கண்​காட்சி!

சென்னை: இந்திய கைவினைக் கவுன்சில் நடத்தும் தறி என்ற கைத்தறிப் புடவைகள் கண்காட்சி வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்திய கைவினைக் கவுன்சில் 1964-ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கமலாதேவி சட்டோபாத்யாய என்பவரால் தொடங்கப்பட்டது.

லாப நோக்கமற்ற சங்கமான இது தொடங்கப்பட்டதில் இருந்து கைவினைஞர்கள் மற்றும் அதன் தயாரிப்பாளர்களின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய அரசு மற்றும் பிற ஆர்வலர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *