Hatshepsut: கல்லறையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒயின்!

எகிப்தின் ராணியின் கல்லறையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மது(ஒயின்) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் பழமையான பாரம்பரிய, கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது எகிப்து நாடு. அங்குள்ள பிரமிடுகள் எகிப்தின் பண்டைய ஆட்சி முறை, கலாச்சாரம், மருத்துவம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை நவீன கால உலகிற்கு எடுத்துக் கூறுகிறது. இந்த நிலையில் எகிப்தின் முதல் பெண் பாரோ(ராணி) என நம்பப்படும் பெண்ணின் கல்லறையிலிருந்து மிகவும் பழமையான மது இருக்கும் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியானா கோஹ்லர் தலைமையிலான ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய குழு  பண்டைய பிரமிடுகளில் ஆய்வு மேற்கொண்டது. அபிடோஸில் உள்ள ராணி மெரெட் நீத்தின் கல்லறையில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரிய ஒயின்பாட்டில்கள் கிடைத்துள்ளது. அவை முழுவதுமாகச் சீல் வைக்கப்பட்டுள்ளன. ராணி மெரெட் நீத் அடையாளம் இதுவரை புரியாத புதிராகவே இருப்பதாகவும், இவர் 3000 பிசி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்றும், அரசு மயான கல்லறையில் ராணிக்கு எனத் தனியாக இருக்கும் பிரமிடு மெரெட் நீத்துக்கு தானெனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்ட ஒயின் திரவமாக இல்லை என்றும், அது சிவப்பு அல்லது வெள்ளையா என்பது கூட அறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் கிடைத்த மதுபானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும், அதன்மூலம் மேலும் சில தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட ஒயின் 5000 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட இடத்தில் கல்லறை வளாகம் இருப்பதாகவும் அங்கு 41 அரண்மனைகள் மற்றும் ஊழையர்களின் கல்லறைகளை உள்ளடக்கியது என்றும் சுடப்படாத மண் செங்கற்கள், களிமண் மற்றும் மரத்தால் கட்டப்பட்டு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திராட்சை விதைகள், சுண்ணாம்பு படிகங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் கூறியுள்ள ஆய்வாளர்கள், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் மிகப் பழமையான ஒயின் ஏன்று கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *