3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

Advertisements

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நேற்று (ஆகஸ்ட் 4) நடந்த என்கவுன்டரில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்... Kulgam

Kulgam | Encounter | Terrorism | Indian Army

ஜம்மு :தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹாலன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலையடுத்து, அங்குப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் நடைபெற்ற சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அதன்பிறகு, என்கவுன்டரில் உயிரிழந்த ராணுவ வீரர்களிடமிருந்து 4 ஏகே-47 துப்பாக்கிகளைப் பயங்கரவாதி ஒருவர் பறித்துச் சென்றார். இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதிக்குக் கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kulgam | Encounter | Terrorism | Indian Army

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *