2G Case: மீண்டும் தூசி தட்டப்படும் 2ஜி வழக்கு.. விசாரணைக்கு டில்லி ஐகோர்ட் ரெடி!

Advertisements

புதுடில்லி: 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கு பதிலாக முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்ததாகவும் இதனால் அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

அவர்கள் விடுதலையை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து விசாரணை டில்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. அப்போது 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *