
டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி ஒன்றிய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் இருந்து இதன் பயனை சந்தாதரர்கள் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. 2021-2022இல் செய்யப்பட்ட டெபாசிட்டுகளுக்கான இ.பி.எஃப் வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டது. இதுவே இதுவரை இல்லாத குறைந்த பிஎஃப் வட்டி விகிதமாகும். இதையடுத்து, 2021-2022 இல், EPFO வட்டி விகிதம் 8.5% ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக EPFO விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வந்தன. 2019-2020 நிதியாண்டில் மார்ச் 2020இல் அறிவிக்கப்பட்ட EPFO வட்டி விகிதம் 8.5% ஆகும்.
2018-2019 நிதியாண்டில், இ.பி.எஃப் விகிதம் 8.65% ஆக இருந்தது. 2013-14 இல், EPFO 8.75% வட்டி விகிதத்தை வழங்கியது. கொரோனா பெருந்தொற்றின் எதிரொலியாக கடந்த மார்ச் 2022ல், 2021-2022ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டது. தற்போது 2022 – 2023ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ.பி.எஃப் வட்டி விகிதத்தை 8.10% இருந்து 8.15% ஆக உயர்த்தி ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பிஎஃப் வட்டி விகிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

