சிக்கலில் விஜய்.. 150 தொகுதிகளில் போட்டியிட ஆள் இல்லை.!

Advertisements
தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பான நிலையை எட்டி இருக்கிறது. திமுக,  அதிமுக , பாஜக என அனைத்து கட்சிகளும் எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள் என்ற பட்டியலை ஏற்கனவே கையில் வைத்த நிலையில் தற்பொழுது மேற்போக்காக நேர்காணல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன..
அந்த வகையில்,  விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் கிட்டத்தட்ட 90 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.  ஆனால் அதே சமயம் சுமார் 145 தொகுதிகளுக்கு போட்டியிட ஆள் இல்லாமல் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது .
இதற்கிடையே,  கூட்டம் கூட்டமாக வந்து வேட்பு மனு வாங்கி சென்றவர்கள் தங்களது விண்ணப்பத்தை திருப்பி தராமல் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி செய்தியாக பார்க்கப்படுகிறது.  தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் விஜய் தற்பொழுது,  தமிழக வெற்றி கழகம் மூலம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதுவரை கூட்டணி  என எந்த கட்சிகளும் சேராத நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட போகிறது .
காங்கிரஸ் கட்சி தன்னுடன் கூட்டணி வைக்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்த விஜய்க்கு தற்பொழுது அதற்கு உண்மையான பதில் கிடைத்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் பரவி வருவது தவறானது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ..
இதற்கு இடையே வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி . எனவே வருகிற நான்காம் தேதி அல்லது ஐந்தாம் தேதி திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பான இறுதி கட்ட முடிவு எடுக்கப்பட்டுவிடும்.
இந்த நிலையில்,  தமிழக வெற்றி கழகம் தற்பொழுது தனித்து விடப்பட்டிருக்கிறது . இறுதி கட்டமாக ஒருவேளை சசிகலா தரப்பிலான புதிய கட்சி கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே , கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் விருப்ப மனு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரே நாளில் பத்தாயிரம் பேர் திரண்டு வந்து விருப்ப மனுக்களை  வாங்கிச் சென்றார்கள்.
இதனை தொடர்ந்து , கடந்த 15 நாட்களில்  60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விருப்ப மனு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். கடந்த இருபதாம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை தலைமை அலுவலகத்தில்
சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது .
அந்த வகையில் , அறுபதாயிரம் பேருக்கும் மேல் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றவர்களில் ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் தான் விருப்ப மனுவை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் பதிவு செய்துள்ளனர்.  விருப்ப மனு வாங்கியவர்கள் அதனை பூர்த்தி செய்து திரும்ப தாக்கல் செய்யும்பொழுது , அந்தந்த தொகுதியை பொறுத்து 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது .
இந்த வைப்புத் தொகை விவகாரம் தொடர்பாக,  ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரும்பவும் விருப்பமனூவை பூர்த்தி செய்யவில்லை என்பது பின்னணி செய்தியாக பார்க்கப்படுகிறது . இந்த நிலையில் ,  எடப்பாடி பழனிச்சாமியும் திமுக தரப்பில் அதன் தலைவர் மு க ஸ்டாலினும் நேர்காணல் நடத்துவது போல் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேர்காணல் நடத்துவதற்கு விரும்பவில்லை. தானே முன் நின்று நேர்காணல் நடத்தினால் ஏராளமான பிரச்சனைகள் வரலாம் என்று விஜய் கருதுகிறார்
இதனால் , அந்த பொறுப்பு பொதுச் செயலாளர் புசி ஆனந்த் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது . வேட்பு மனுவை திரும்ப தாக்கல் செய்தவர்கள் தலைவர் விஜயை பார்த்து பேசலாம் . தன்னுடைய பணிகள் குறித்து விவரித்து வேட்பாளருக்றிய அங்கீகாரத்தை பெறலாம் என்று எதிர்பார்த்த நிலையில்,  தற்போது விஜய் நேர்காணல் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி செய்தியாக பரவி வருகிறது ..
இதனிடையே நேர்காணல் நடத்த முடியாத தமிழக வெற்றி கழகம் தற்பொழுது ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் உங்கள் தொகுதியில் இருந்து இரண்டு அல்லது மூன்று பேரை சிபாரிசு செய்யுங்கள் அது பற்றி நாங்கள் ஆலோசனை செய்கிறோம் என புதிய திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்
இதனிடையே , விஜய் நற்பணி மன்றத்தை நீண்ட காலமாக தலைமை ஏற்று நடத்தி வந்த விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பணியாற்றிய தன்னுடைய ரசிகர்கள் பட்டியல் ஒன்றை கையில் வைத்திருக்கிறார் . அதன்படி கிட்டத்தட்ட 90 வேட்பாளர்களை அவரே தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து வைத்துள்ளதாக தெரிகிறது ..
இதனைத் தொடர்ந்து,  இன்னும் ஒரு சில தினங்களில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிக்க காத்திருக்கிறார் .இதனை அறிவிப்பதன் மூலம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகம் அடைவார்கள் என அவர் எதிர்பார்க்கிறார் .
இதனிடையே மார்ச் மாதம் இரண்டாவது வாரம் அனைத்து தொகுதிகளுக்கு உண்டான வேட்பாளர்களை ஒரே பொதுக்கூட்டத்தில் அறிவிக்கவும் அவர் ஏற்பாடு செய்து வருகிறார் . இதற்கிடையே ஆயா அவர் நியமித்த தமிழக வெற்றிக்கழக தலைமை நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்து வருவது தொடர்வதால் அவர்கள் அனைவரையும் அழைத்து விஜய் காட்டமாக பேசியிருப்பதாகவும் தெரிகிறது .
இதனால் , தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிர்வாகிகளும் தற்பொழுது மனச்சோர்வு அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது . இதனடையே நடிகர் விஜய் தேர்ந்தெடுக்கும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் பெரும்பாலும் சாதி ரீதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிகிறது.
குறிப்பாக முக்குலத்தோர் இனத்தவர் மற்றும் தலித் இனத்தவர்களுக்கு அவர் முக்கியத்துவம் தரப்போவதாக தெரிகிறது . மேலும் , பிற கட்சிகளில் இருந்து வரும் நிர்வாகிகள் தலைவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்கி தர அவர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது ..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *