பத்திரப்பதிவு தொடர்புடைய சேவைக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

Advertisements

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற, ஆவணப் பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து, கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisements

அதன் அடிப்படையில், ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாய் எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு, அதிகபட்ச பதிவு கட்டணம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் எனவும், அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும், தனி மனை பதிவுக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு, பதிவுக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் உள்ளதை, சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *