
இராணிப்பேட்டை காவல்துறையினர் வெளிமாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்த 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 210 கிலோ கஞ்சா மற்றும் 3 கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.அந்த மாவட்ட காவல்துறைக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதன்படி, கடந்த சில தினங்களாக வெளிமாநிலங்களில் இருந்து இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்த 6 பேரை வெவ்வேறு இடங்களில் கைது செய்ததோடு,அவர்களிடமிருந்து 210 கிலோ கஞ்சா மற்றும் முன்று கார்கள் பறிமுதல் செய்யதனர்
.கடந்த 30.03.2025 தேதி ஆற்காடு நகர போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 30 கிலோ கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்ததோடு, அதனை கடத்தி வந்த இராணிப்பேட்டையை சேர்ந்த குமரேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று இரவு ஆற்காடு நகர போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்று பேர் குப்தா சரண் சாகு, சுதிர் அல்பேரியா, தேபப்ரதா தாஸ் ஆகியோர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில் வேறு ஒரு இடத்தில் ஆற்காடு தாலூகா போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 60 கிலோ கஞ்சா மற்றும் அதற்கு பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ரெலிமஜி, கவுரப் திருப்பிடிகா ஆகியோர்களை கைது செய்து, வழக்கு பதியப்பட்டு தீவிர விசாராணை செய்து வருகிறார்கள்.
இரண்டு நாட்களில் ராணிப்பேட்டை காவல் துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளார்கள் மேலும் அவர்களிடமிருந்து 210 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார்களை பறிமுதல் செய்துள்ளார்கள்.



