ஐதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்தது- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisements

மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று பகலில் ஐதராபாத் அருகே பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது.

Advertisements

இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள். இந்த ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மின் கசிவு காரணமாக ரெயில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *