நடிகை லட்சுமிமேனனை விரட்டும் போலீஸ்: மதுபாரில் நடந்தது என்ன?

Advertisements
மது பாரில் நடந்த கலாட்டா தொடர்பாகப் பிரபல நடிகை லட்சுமி மேனனை கைது செய்வதற்காகப் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் . இதனை அடுத்து நடிகை லட்சுமிமேனன் வருகிற 17-ஆம் தேதிவரை முன்ஜாமின் பெற்றுள்ளார்.நள்ளிரவில் மதுபாரில் என்ன நடந்தது? நடிகை லட்சுமி மேனனுக்கு ஏன் இந்தச் சிக்கல் ஏற்பட்டது என்பது குறித்த விரிவான செய்தியை இப்போது பார்க்கலாம்
தமிழில் பிரபல இளம் நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன் கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் மலையாள படங்களில் நடித்துப் பின்னர் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து கும்கி குட்டி புலி பாண்டியநாடு கொம்பன் வேதாளம் லாரன்ஸ் நடித்த சந்திரமுகி இரண்டு ஆகிய படங்களில் நடித்தார் தமிழில் இவருக்கென்று தனியாக ரசிகர் பட்டாளம் உருவாகியது . நடிகை லட்சுமிமேனனுக்கு 27 வயதாகிறது.இந்த நிலையில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிச் சென்றார். இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி கேரளாவில் கொச்சி பேனர்ஜி சாலையில் உள்ள வெலாசிட்டி என்ற இரவு நேர சொகுசு மதுபாருக்கு லட்சுமி மேனன் சென்றார். அவருடன் மிதுன் அனீஸ்  சோனாமோல் என மூன்று நண்பர்களும் ஒரு காரில் சென்றனர்.
இவர்கள் அனைவரும் மதுபாரில் இருந்தபோது பக்கத்து மேசையில் ஆலுவா என்ற இடத்தைச் சேர்ந்த அலியார் ஷா, , சலீம் மற்றும்  ஒரு நண்பர் ஆகிய மூவருமாகச் சேர்ந்துமது அருந்திக் கொண்டு இருந்தார்கள் .அப்பொழுது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டது. மதுபாருக்கு வெளியே வந்தபிறகும் இந்த இரண்டு கும்பலுக்கும் இடையே மோதல் தொடர்ந்தது.
இதனைத் தொடர்ந்து மது பார் மூடிய நிலையில் நடிகை லட்சுமி மேனனும் அவருடன் வந்த நண்பர்களும் தாங்கள் வந்த காரில் எதிர் தரப்பினர் காரை விரட்டினர்.இரவு 11:45 மணி அளவில் எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலம் அருகே சிட்டி கார்னர் என்ற இடத்தில் வைத்து அந்தக் காரை மறித்த நடிகை லட்சுமிமேனனின் நண்பர்கள் அதிலிருந்து சலீமை  அடித்துக் கீழே இறக்கி அவரைத் தனியாகக் கடத்திச் சென்றனர். தங்கள் காரில் சலீமை கடத்திச் சென்று  அவரைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர் பின்னர் ஆலுவா –  பராவூர் சந்திப்பில் சலீமை கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த சீமை அவரது நண்பர்கள் மீட்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் சேர்த்தனர் . சலீம் ஐடி ஊழியராக வேலை பார்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனைத் தொடர்ந்து லட்சுமிமேனன் உட்பட மூன்று நண்பர்களையும் சேர்த்து சலீம் நண்பர்கள்எர்ணாகுளம் காவல்துறையில் புகார் மனு கொடுத்தனர். இதன் பேரில் எர்ணாகுளம் வடக்கு போலீசார் லட்சுமிமேனனின் நண்பர்களாகிய மிதுன் அனீஸ் சோனாமோல் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.இதில் கைது செய்யப்பட்ட சோனாமோல் அளித்த புகாரின் பேரில் எதிர் குழுவைச் சேர்ந்த ஒருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து லட்சுமிமேனனை கைது செய்வதற்காகப் போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர் ஆனால் அவரது வீட்டு பூட்டி கிடந்தது அவரது செல்போனும் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது
நடிகை லட்சுமி மேனன் தலைமறைவான நிலையில் அவரும் நண்பர்களும் மது பார் வாசலில் தகராறு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகின. இதற்கிடையே நடிகை லட்சுமி மேனன் தனக்கு முன் ஜாமின் கேட்டுக் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அந்த மனுவில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை உள்நோக்கம் கொண்டவை இந்தக் குற்றச்சாட்டில் எனக்கு எந்தப் பங்கும் கிடையாது எனது நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
லட்சுமி மேனன் சார்பாக வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த இந்த மனுமீது நீதிபதி குரியன் தாமஸ் விசாரணை நடத்தினார் பின்னர் நடிகை லட்சுமிமேனனை செப்டம்பர் 17ஆம் தேதிவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.தற்பொழுது ஆள் கடத்தல் மற்றும் தாக்குதல் என ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது லட்சுமிமேனன் உட்பட அனைவரும் தகராறு செய்த சிசிடிவி காட்சிகளும் காவல்துறை  வசம் உள்ளது.நடந்த சம்பவம் தொடர்பாகத் தற்பொழுது இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் பேசி வருவதாக இறுதி கட்ட செய்தி வெளியாகி உள்ளது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *