குற்றங்களே இல்லை என்பதே சாதனை – முதல்வர் ஸ்டாலின்!

Advertisements

சென்னை: 

‘குற்றங்களைக் குறைத்து விட்டோம் என்பது சாதனை அல்ல. குற்றங்களே இல்லை என்று சொல்வது தான் சாதனை’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை கலைவாணர் அரங்கில், சீருடைப் பணிக்குத் தேர்வான 3,359 பேருக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியது: 165 ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்கது காவல்துறை. காவல் துறையை மேம்படுத்த முதல்முறையாகக் காவல் ஆணையம் அமைத்தது தி.மு.க., அரசு. உலக அளவில் சிறந்து விளங்கும் போலீசார் மற்றும் தமிழக காவல்துறை. காவல்துறையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். காவல்துறைக்கு பக்கபலமாகத் தமிழக அரசு இருக்கிறது.

மக்களுடன் நெருக்கமாகக் காவல்துறை இருக்கிறது. குற்றங்களைக் குறைத்து விட்டோம் என்பது சாதனை அல்ல. குற்றங்களே இல்லை என்று சொல்வது தான் சாதனை. குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்வது சாதனை அல்ல. குற்றங்களைத் தடுத்து விட்டோம் என்று சொல்வதே சாதனையாக இருக்க வேண்டும். ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையாகத் தமிழக போலீசார் செயல்பட்டு வருகின்றனர் மக்களைக் காக்கும் போலீசாரை காக்கும் திராவிட மாடல் அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்.

மக்களின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு போலீசார் இடம் தான் உள்ளது. கடைநிலை போலீஸ் அவர்களிடம் கூட உயர் அதிகாரிகள் பிரண்ட்லியாக இருக்க வேண்டும். இன்று பணியில் சேரும் போலீசார் இதே புத்துணர்ச்சி உடன் கடைசி வரை பணியாற்ற வேண்டும். உங்களது உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள். குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள். மக்களுக்குப் போலீசார் மீது பயம் இருக்கக் கூடாது. மரியாதை தான் இருக்க வேண்டும். புகார் அளிக்க வரும் மக்களிடம் போலீசார் கனியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *