
Actress Yashika Aannand : டெல்லியில் பிறந்த பெண்ணாக இருந்தாலும் பெருமளவு தமிழ் மொழியில் மட்டுமே நடித்து வரும் நடிகை தான் யாஷிகா ஆனந்த்.
கடந்த 1999ம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது 17வது வயதில் “கவலை வேண்டாம்” என்கின்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கினார்.
பல முன்னணி நடிகர்களுடைய படங்களில் நடித்திருக்கிறார் என்ற பொழுதும் இன்றளவும் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.
இந்நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் “படிக்காத பக்கங்கள்” என்கின்ற திரைப்படத்தில் கதையின் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


