
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடுமசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்ப்பு…
புதுடெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின்னர், தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு தமிழக முதலமைச்சர் மூ.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது வரவேற்கதக்கது என்றும் இந்த மசோதா காலதாமதமாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது ஏன் என்றும் தமிழக முதலமைச்சர் மூ.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
