
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தித் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகப் பெண்ணைக் காவல் துறை கைது செய்துள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை தெருவைச் சேர்ந்தவர் ஜீவா மகனின் சிவசந்திரன். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தான் டாக்டராகச் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்து வருவதாகச் சிவசந்திரனிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இருவரும் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிவசந்திரன் – நித்திலாவுக்கு முறைப்படி திருமணம் நடந்தது.
இந்தத் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட சீர்காழி அருகே புத்தூர் வாய்க்காங்கரை தெருவைச் சேர்ந்த தங்கராசு மகனின் நெப்போலியன் (34) சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
புகாரில் “கடந்த 2017 ஆம் ஆண்டுக் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெயரில் நித்திலா எனக்கு அறிமுகமானார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்தபோது மீனா சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.
அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் மீரா, சீர்காழியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
தன்னை ஏமாற்றிய மீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் போலீஸார், சரஸ்வதி என்ற நித்திலாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன.
அவர் கொடியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழையாறு கிராமத்தைச் சேர்ந்த சுடலைக்கும் முறைப்படி கடந்த 2017ஆம் ஆண்டுத் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டால், பெண் குழந்தையைத் தனது கணவரின் அண்ணனின் பராமரிப்பில் விட்டுவிட்டு ஆண் குழந்தையுடன் கொடியம்பாளையத்தில் தனது அம்மா வீட்டில் சரஸ்வதி வசித்து வந்துள்ளார்.
பின்னர் தனது பெயரை மீனா என மாற்றிக் கொண்டு 2017ஆம் ஆண்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியனை திருமணம் செய்து கொண்டு அவருடன் 4 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு 2021 இல் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த நடராஜனின் மகன் ராஜாவிடம்தான் டாக்டர் எனக் கூறி அவருடனும் குடும்பம் நடத்திவிட்டு அங்கிருந்தும் தலைமறைவாகிவிட்டார்.
அதுபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை சரஸ்வதி ஏமாற்றியது தெரியவந்தது. அந்த வகையில் நித்திலா என்ற பெயரில் இந்தப் பெண் ஏமாற்றியதாகச் சிவசந்திரனும் புகார் அளித்துள்ளார்.
இவர் பல ஆண்களைப் பல பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சரஸ்வதி, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
