திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

Advertisements
தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகையான ஸ்ருதிஹாசன், பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஆவார். ஸ்ருதிஹாசன் 6வது வயதில் தனது முதல் பாடலைப் பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் அந்தப் பாடலைப் பாடினார். இதைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் பல்வேறு படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

2011-ஆம் ஆண்டில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் தற்போது ரஜினியின் கூலி படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், திடீரெனப் பிரேக்கப் செய்து கொண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதற்கிடையே ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போதும் தான் அந்த முடிவிலிருந்து மாறவில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறி உள்ளார்.

திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே விரும்புவதாகவும், திருமணமே செய்யமாட்டேன் என்றும் கூறமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். Never என்ற வார்த்தையை என்னால் சொல்ல முடியாது, வாழ்க்கை என்பது unpredictable என்றார். எனவே, ஸ்பெஷலான ஒருவர் வந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம் என்றும், ஆனால் அது நடக்கும் என்று தனக்கு தோன்றவில்லை என்றும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *