Weekly Rasi Palan: வார ராசிப்பலன் செப்டமபர் 24 முதல் 30 வரை-2023

வார ராசிப்பலன்
செப்டமபர் 24 முதல் 30 வரை 2023
புரட்டாசி 7 முதல் 13 வரை

 

 

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
27.09.2023 புரட்டாசி 10 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை

 

மேஷம் ( அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் )


நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும், 5-ல் புதன், 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பண வரவுகள் தாராளமாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாக கூடிய வாய்ப்புகள் ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும்.

உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூக நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சட்ட ரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்களை பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட சுலபமாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த சில நாட்களாக இருந்த மன குழப்பங்கள் தற்போது விலகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் உங்களுக்கு உள்ள சங்கடங்கள் எல்லாம் குறைந்து ஏற்ற மிகுந்த பலன்கள் கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28.

 

ரிஷபம் ( கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1,2-ஆம் பாதங்கள் )


சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்பதாலும், கேந்திர ஸ்தானமான 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை நீங்கள் அடைவீர்கள். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் உங்களுக்கு பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து சகலவிதமான தேவைகளும் குறித்த நேரத்தில் பூர்த்தியாக கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

சனி வக்ர கதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் தற்போது விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைப்பதால் உங்களுக்கு இருந்த மன கவலைகள் விலகும். சட்ட ரீதியாக உள்ள சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவதால் எடுத்த பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து நல்ல பெயர் எடுக்க முடியும்.

வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது பலனடைய உள்ளீர்கள். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கும். பெண்கள் மூலமாக எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.
சந்திராஷ்டமம் – 22-09-2023 மாலை 03.35 மணி முதல் 24-09-2023 இரவு 07.18 மணி வரை.

 

மிதுனம் ( மிருகசீரிடம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள் )


நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகி தேவையற்ற அலைச்சலை எதிர்கொள்வீர்கள். வண்டி, வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம்.

இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடன்பிறந்தவரிடம் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். தனகாரகன் குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் குறித்த நேரத்தில் நிறைவேற இடையூறுகள் ஏற்படும்.

சூரியன், புதன் பரிவர்த்தனை பெற்று சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதனை எளிதில் சமாளிக்க கூடிய பலம் உங்களுக்கு கிடைக்கும். வெளி நபர்களுடைய உதவி உங்களுக்கு தக்க நேரத்தில் கிடைப்பதால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். புதிய யுத்திகளை பயன்படுத்தி அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உங்கள் ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதால் சிக்கலான நேரத்தில் மிகச் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.

உங்கள் உழைப்புக்கான ஒரு கௌரவ நிலை அடையக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். சக ஊழியரிடம் பேசுகின்ற பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 24, 29, 30.
சந்திராஷ்டமம் – 24-09-2023 இரவு 07.18 மணி முதல் 26-09-2023 இரவு 08.28 மணி வரை.

 

கடகம் ( புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )


சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டில் மாதக்கோளான சூரியன் உங்கள் ராசிக்கு யோக காரகனான செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குரு வக்ர கதியில் இருப்பதால் தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உங்களை நாடி வரும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைய நேரிடும். வேலையாட்கள் உங்கள் சொல்படி கேட்பதால் பெரிய ஆர்டர்களை எடுத்து உங்களுடைய வாடிக்கையாளர்களுடைய தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

உங்களது பேச்சுத்திறமையால் தேவையற்ற நெருக்கடிகளை எளிதில் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய ஒரு அமைப்பும், அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்க கூடிய பலமும் ஏற்படும். ஒரு சிலருக்கு பிள்ளைகள் வழியில் சின்ன சின்ன மன கவலைகள் ஏற்படலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26,
சந்திராஷ்டமம் -26-09-2023 இரவு 08.28 மணி முதல் 28-09-2023 இரவு 08.28 மணி வரை.

 

சிம்மம் ( மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம் )


சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், செவ்வாயுடன் 2-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் உடன் இருப்பவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்துப் பேச வேண்டிய நேரமாகும்.

உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு மிகவும் நிதானத்தோடு இருந்தால்தான் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். ஜென்ம ராசியில் புதன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் இருந்தாலும் உரிய நேரத்தில் தக்க பண உதவிகள் கிடைத்து உங்களது குடும்பத் தேவைகள் குறித்த நேரத்தில் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் உறவினர்களால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவதன் மூலம் நீங்கள் போட்ட முதலை எடுக்க முடியும்.

வேலையாட்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வேலையை எதிர்பார்த்தவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை எட்ட முடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் பைரவர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28.
சந்திராஷ்டமம் – 28-09-2023 இரவு 08.28 மணி முதல் 30-09-2023 இரவு 09.10 மணி வரை.

 

கன்னி ( உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள் )


சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் ஆகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் தனவரவுகள் மிகவும் சாதகமாக இருந்து எதையும் எதிர்கொள்ள கூடிய பலம் உண்டாகும்.

வயது மூத்தவரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் தேவையற்ற பேச்சை குறைத்து விட்டு உங்களுடைய பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தற்காலிகமாக தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு மிக உயரிய நிலையினை அடையக்கூடிய யோகம் உண்டு.

உடன் இருக்கக்கூடிய பெண்கள் மூலமாக எதிர்பாராத அனுகூலங்கள் உங்களுக்கு கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு சிறு நெருக்கடி இருந்தாலும் உங்களின் கடின உழைப்பால் போட்ட முதலை எளிதில் எடுப்பீர்கள்.

கூட்டாளியினுடைய ஆதரவு சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். மற்றவர்கள் சொல்வதை காதில் வாங்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் நல்ல பெயர் எடுக்க முடியும். துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.

 

துலாம் ( சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள் )


நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதாலும், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் எதிலும் திறமையாக செயல்பட்டு அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பேச்சு திறமையால் உங்களுக்கு உள்ள வீண் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறிதளவு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருந்தால் வீண் இழப்புகளை தவிர்க்க முடியும்.

தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் பராமரிப்பு செலவுகள் சற்று அதிகப்படியாக இருப்பதால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் சற்று குறையும்.

அரசு அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது தேவையற்ற பேச்சை குறைத்து விட்டு தொழில் தொடர்பான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது குறைந்து மன அமைதி ஏற்படும். பங்காளியிடம் சற்று கவனத்தோடு இருப்பது, வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 24, 29, 30.

 

விருச்சிகம் ( விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை )


நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ராசியாதிபதி செவ்வாய், மாதக்கோளான சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாக கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் அரங்கேறும். அசையும், அசையா சொத்துகளில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்ற உங்களது நீண்ட நாளைய ஆசைகள் தற்போது நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த தேவையற்ற கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகமான நிலை உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் சந்தை சூழல் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து அதிகப்படியான லாபங்களை ஈட்டுவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தற்போது நிறைவேறி நிம்மதி ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட கூடிய அமைப்பும், மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளை நீங்கள் தலையிட்டு சுலபமாக முடிக்க கூடிய பலமும் உண்டாகும்.

சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 25, 26.

 

தனுசு ( மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)


பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் கேது சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சூரியன், புதன் பரிவர்த்தனை பெற்று சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் போட்டியாளர்களை உங்களுடைய தனித்திறமையால் எளிதில் சமாளித்து அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்.

நீங்கள் நீண்ட நாட்களாக பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறக்கப் போகிறது என்று கூறினால் மிகையாகாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் மனம் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

பெண்கள் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றுவது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 24, 27, 28.

 

மகரம் ( உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்)


எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் உடன் இருப்பவர்கள் ஆதரவால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர், வெளி மாநிலங்கள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உங்களுக்கு இருந்து வந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் சுலபமாக முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலையை சிறப்பாக கையாண்டு அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு கிடைக்கும். வேலையாட்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.

மற்றவர்கள் வேலையும் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை பெறுவீர்கள். அசையும், அசையா சொத்து வகையில் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் ஆகும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது நன்மையை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 25, 26, 29, 30.

 

கும்பம் ( அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள் )


அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு உள்ள அனைத்து விதமான பொருளாதார நெருக்கடிகளும் தற்போது குறையும்.

பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். நண்பர்கள் மூலமாக ஒரு சில வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தள்ளி வைப்பது மிக மிக நல்லது.

தொழில், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பை கூட தவறவிடாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் போட்ட முதலை எடுக்க முடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு எந்திரங்களை பழுது பார்ப்பதற்காக எதிர்பாராத வகையில் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொன்னாலும் அனைத்தையும் சமாளிக்க கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 24, 27, 28.

 

மீனம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )


பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை கணவன்- மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

உறவினர்கள் மூலமாக தேவையற்ற மனக்கவலைகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் தான் நிலைமையை சமாளிக்க முடியும். ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள் கூட கடைசி நேரத்தில் தடைப்படும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் மூலமாக ஒரு சில சாதகமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி 12-ல் சஞ்சரித்தாலும் தற்போது வக்ர கதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியமானது சாதகமாக இருக்கும்.

பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. சிலர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி உங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளை தவற விட்டு விட வேண்டாம். தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அர்ச்சனை செய்வது நன்மையை தரும்.

வெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 29, 30.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *