பணயக்கைதிகள் பட்டியலை வழங்கும் வரை போர் தொடரும் – நேதன்யாகு!

Advertisements

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாகக் கூறி  இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான மோதல் தொடர்ந்தது.

போர் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் ஏற்பட்ட நிலையில், மறுப்பக்கம் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவதாகச் சர்வதேச அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அமெரிக்கா மற்றும் கத்தார் ஈடுபட்டன.

அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் கடந்த புதன் கிழமை அறிவித்தது.

அந்த வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அமலுக்கு வருகிறது. இஸ்ரேல் நேரப்படி இன்னும் சில மணி நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வர இருந்தது.

இந்த நிலையில், பண்யக்கைதிகளின் பட்டியலை வழங்கும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் விடுவிக்கப்படும் பயணக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பயணக்கைதிகளின் பட்டியலைத் தரும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் காசா மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை போர் நிறுத்தம் அமலுக்கு வராது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பயணக்கைதிகளின் பட்டியல் தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் படி, காசா மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் சுகாதாரம், சாலை மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மோசமாகச் சேதமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது என எகிப்து தெரிவித்து உள்ளது. காசா போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அது இந்திய நேரப்படி இன்று மதியத்திலிருந்து தொடங்கும் என்று கூறப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *