DMDK: அன்னதானம் வழங்கிய தொண்டர்கள்!

Advertisements

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூர்ண குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து தேமுதிகவினர் கோயில்களில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று வார காலமாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் அவரது உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு அவர் அபாய கட்டத்திற்கு சென்றதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது திகைத்தனர்.இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதை அடுத்து இந்த நிகழ்வை தேமுதிக முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்கள் தலைவர் குணமடைந்ததை உற்சாகமடைந்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை மாதவரம் அடுத்த மாத்தூரில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் திருக்கோயிலில் புழல் ஒன்றிய தேமுதிக சார்பில் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்ததை முன்னிட்டு சர்வ சக்தி மாரியம்மன் க்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பக்த பெருமக்கள் மற்றும் கோவிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சி காண ஏற்பாட்டினைதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம் டெல்லி    மாவட்டத் துணைச் செயலாளர் சிங்காரம், பகுதி செயலாளர் ரஜினி.  வட்டச் செயலாளர் டில்லி பாபு உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *