Vladimir Putin: அணு ஆயுத போருக்குத் தயார்!

அணு ஆயுத போருக்குத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர விரும்பியது. அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவது, நேட்டோ அமைப்பில் சேருவது போன்றவை ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று புதின் தெரிவித்தார். அத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது போரும் தொடுத்தார்.

தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்ததாகவும், அதைப் பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்கள் தலையிட்டுத் தடுத்ததாகவும் அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் 2 பேர் தனியார் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இந்தநிலையில் ரஷ்ய அதிபர் புதின் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுத போருக்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.மேலும் அணு ஆயுத போருக்குத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவசரபடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *