
Aadi Festival 2023 | Ramapuram
ராமாபுரம், திருமலை நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் 37ஆம் ஆண்டு ஆடித் திருவிழாபந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது…
சென்னை: ராமாபுரம், திருமலை நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் 37ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ நாகாத்தம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் மற்றும் பந்தக்கால் நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாதரனை காண்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நாகாத்தம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் மற்றும் பந்தக்கால் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Aadi Festival 2023 | Ramapuram
இதில் அனைத்து பக்தர்களும் தாய்மார்களும் பெரியவர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.முக்கிய திருவிழாவானது வரும் வெள்ளிகிழமை(11.08.23)அன்று காலைப் பால்குட ஊர்வலம், மதியம் அன்னதானம், மாலை சுமங்கலி பூஜை, சக்திகரகம் புறப்பாடு நடைபெறுகிறது, சனிக்கிழமை(12.08.23)அன்று அம்மனுக்கு அபிஷேகம், சக்திகரகம் புறப்பாடு, மதியம் அன்னதானம், மாலை பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது, கடைசித்திருநாளன்று ஞாயிற்றுக்கிழமை காலை
சக்திகரகம் புறப்பாடு, மதியம்கூழ்வார்த்தல், அம்மன் வீதிஉலா மற்றும் அம்மனுக்கு கும்பம் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.திருவிழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் தலைவர் ராமையா, ஏழுமலை, பாண்டிதுரை, ஆறுமுகம் பொன்தயாளன், ராஜசேகரன், மணிகண்டன், வேல்ராஜ், ஆகியோர்செய்துள்ளனர்.

