
கிராம சபை கூட்டம்குறித்து முறையான அறிவிப்பு இல்லையென வெலக்கல்நாத்தம் ஊராட்சி மன்ற தலைவரைக் கண்டித்து துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராமன் தலைமையில் நடைபெற இருந்தது.
இந்த கிராம சபை கூட்டம் குறித்து ஊராட்சி மன்ற துணை தலைவர் ராமமூர்த்திக்கும் அதே போல் வார்டு உறுப்பினர்களுக்கும் முறையான அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது.
அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 9க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் கிராம சபை கூட்டம்குறித்து அறிவிப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராமன் தெரிவிக்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக விறைத்து வந்த நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் பழனி, வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் துரைராஜ், நாட்றம்ள்ளியில் துணை ஆய்வாளர் நந்தகுமார் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து வைத்து உடனடியாகக் குறைபாடுகளைச் சரி செய்யப்படும் என உறுதி அளித்ததுடன் கிராம சபை கூட்டம் மறு தேதி அறிவிக்கப்படும் என உறுதி அளித்தபிறகு பொதுமக்கள் வார்டு உறுப்பினர் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.

