நேரம் ஒதுக்காத ஆளுநர் : கொந்தளிக்கும் தவெக..! அனுமதி மறுப்பு ஏன்.?

Advertisements

தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விசிக (2), ஐயுஎம்எல் (2), காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4) எனப் பல கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கியிருந்தாலும், ஆளுநர் மாளிகை இந்த ஆதரவு கடிதங்களை முறைப்படி ஏற்கவில்லை. அனைத்து ஆதரவு கடிதங்களையும் (118+) நேரில் சமர்ப்பித்தாலே தவிர, ஆட்சியமைக்க அழைக்க முடியாது என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு  7:10 மணிக்கு ஆளுநர் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் புறப்படுகிறார். மாலை 6 மணிக்குச் சந்திக்க விஜய் நேரம் கோரியிருந்தும், பயணத்தைக் காரணம் காட்டி நேரம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆளுநரின் இந்தத் தாமதத்தைக் கண்டித்து, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம். ராமசுப்பிரமணி மற்றும் தவெக உறுப்பினர் எழிலரசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். “தனிப்பெரும் கட்சித் தலைவரை அழைத்து, அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிப்பதே அரசியல் சாசன முறை; அதை ஆளுநர் மீறுகிறார்” என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *