தவெக விற்கு விசிக – வை தொடர்ந்து ஆதரவு வழங்கிய IUML..!

Advertisements

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், கடந்த சில நாட்களாக “திக்.. திக்..” நிமிடங்கள் நீடித்து வந்தன. ஆளுநர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சி என்ற அச்சம் நிலவிய சூழலில், இன்று விசிக எடுத்துள்ள முடிவு தமிழக அரசியலைத் தலைகீழாக மாற்றியுள்ளது.

ஆரம்பத்தில் மௌனம் காத்து வந்த விசிக தலைவர் திருமாவளவன், இன்று மாலை 4 மணிக்கு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்தார். “தமிழகத்தில் ஜனநாயக விரோத சக்திகள் நுழைவதைத் தடுக்கவும், ஆளுநர் ஆட்சியின் மூலம் மாநில சுயாட்சி பறிக்கப்படுவதைத் தவிர்க்கவும், தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க விசிக ஆதரவு அளிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரவு கேரளா புறப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே திருமாவளவன் மற்றும் பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சென்று ஆட்சியமைக்க உரிமை கோர விஜய் திட்டமிட்டுள்ளார். பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லம் மற்றும் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகம் என இரு இடங்களிலும் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணிப்பதாகக் கூறும் இரு தலைவர்களும் கைகோர்த்திருப்பது, தமிழகத்தில் ஒரு வலுவான மதச்சார்பற்ற மற்றும் சமூக நீதி அரசை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மேலும் , தவெகவிற்கு விசிக ஆதரவு கடிதத்தை வழங்கிய நிலையில் , தற்போதைய நிலையில் , விஜய் மீண்டும் , ஆளுநரை சந்தித்து விசிகவின் ஆதரவு கடிதத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் , தற்பொழுது 118 MLA -க்களுடன் சட்டமன்றத்தை கூட்டி விஜய் முதலமைச்சர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..

மேலும் , “பகையை விடப் பண்பே பெரியது, தனிமனித விருப்பை விட மாநில நலனே முக்கியம் என்பதை இந்தத் கூட்டணி நிரூபித்துள்ளது. இனி தமிழகத்தின் தலைவிதி மக்களின் கைகளில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *