பெரம்பூர் தொகுதியியில் தனது வெற்றியை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்துச் செய்யக் கோரிய முதலமைச்சர் விஜயின் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் ஜோசப் விஜய் வெற்றிபெற்றதை எதிர்த்துத் திமுக வேட்பாளர் சேகர், வாக்காளர்கள் தினேஷ், இலட்சுமி நரசிம்மன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாடுத்தனர்.
தனது வெற்றியை எதிர்த்துத் தினேஷ் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி முதலமைச்சர் ஜோசப் விஜய் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி இலட்சுமி நாராயணன் விசாரித்தார்.
வழக்கு விசாரணையில் விஜய் தனது வேட்பு மனுவில் பண்ருட்டியில் வாங்கியிருந்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் பற்றிய தகவலை மறைத்துவிட்டதாகத் தினேஷ் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேபோல் கொடைக்கானல் வில்பட்டியில் விஜய் வாங்கியுள்ள அரை ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, தனது வெற்றியை எதிர்த்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரிய முதலமைச்சர் ஜோசப் விஜயின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.


