நடிகையோடு நடிக்க சங்கீதாவிடம் அனுமதி கேட்ட விஜய்!

Advertisements

சென்னை:

அப்பா, அம்மாவையே தன்னுடைய தவெக -வில் விஜய் சேர்த்து கொள்ளவில்லை என்றும், ஆனால், விரைவில் விஜய்க்காக, திரிஷா தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய அனுமானத்தை தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்… அந்தப் பேட்டியில் திரிஷா பற்றிப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“கிறிஸ்துமஸ்-க்கு வாழ்த்து சொல்ல வேண்டிய திரிஷா, “என்னுடைய மகன் இறந்துவிட்டான், சோகத்தில் மூழ்கிவிட்டேன்” என அறிவித்திருக்கிறார். த்ரிஷா வீட்டில் பல நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அரில ஒரு ஆண் நாய் பெய்ர சோரோ. இது வெளிநாட்டு இனத்தைச் சேரந்த நாயாகும்

துக்கம்:

திரிஷா படுக்கையில் புகுந்து விளையாடும் இந்த நாய், கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்துவிட்டது… நம்ம வீட்டில் நாய் இறந்துவிட்டால் கொண்டு போய்ப் புதைச்சிடுவோம், ஆனால் திரிஷா “என்னுடைய மகள் சோரோ இறந்துவிடடான். எங்கள் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். அதிலிருந்து மீள முடியவில்லை” என்று கண்ணீரும் கம்பலையுமாக இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.

த்ரிஷாவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்தது… திருமணம்வரைக்கும் சென்று, அது ரத்தாகிவிட்டது, கல்யாணமாகாமலேயே அதெப்படி எப்படி மகன்? என்று இன்ஸ்டா பதிவைப் பார்த்து எல்லாரும் திரிஷாவிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அஜீத், விஜய்:

திரிஷாவின் ஒரிஜினல் பெயர் அனு ராதிகா… கடந்த 25 வருடங்களாகத் தொடர்ந்து கதாநாயகியாகத் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. விஜய்யுடன் இப்போதுவரை நெருங்கிய நட்புடன் இருக்கிறார். தொடர்ந்து அவருடன் படங்களில் நடித்து வருகிறார். அஜீத்துடனும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அந்த அளவுக்குப் புகழ்பெற்ற நடிகை திரிஷா.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்குக் கோவா சென்றிருந்தார்., விஜய்யுடன் தனி விமானத்தில், ஒன்றாகச் சென்றார். இதற்கு ஆதாரமாக, விஜய் விமான நிலையத்தில் நுழையும்போது, அங்கிருந்த கடிகாரத்தில் 7 மணி காட்டுகிறது. திரிஷா நுழைந்தபோது 7.05 என்று மணி காட்டுகிறது. அப்போது திரிஷா முக்காடு போட்டுக் கொண்டு வந்தார்… விஜய் முகக்கவசத்துடன் வந்தார்.

யார் எடுத்தது:

இந்தப் போட்டோக்களை யார் எடுத்தது தெரியவில்லை. பொதுவாகத் தனி விமானத்தில் செல்பவர்களை இப்படி யாரும் போட்டோ எடுக்கமாட்டார்கள். ஆனால், இவர்களது பாஸ்போட், டிக்கெட், பிளைட் நம்பர் எல்லாமே யாரோ சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிட்டார்கள். ஆனாலும் திரிஷா இதைப் பற்றிக் கவலையேப்படவில்லை.

ஆரம்பத்தில் விஜய்யின் 3 படங்களுக்கான கதைகளை அவரது அப்பாதான் கேட்டு வந்தார்… அதற்குப் பிறகு விஜய்யே தனக்கான கதையைச் சுயமாகத் தேர்ந்தெடுத்தார். பிறகு மனைவி சங்கீதா, விஜய்யின் கதை விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்வார். அந்தச் சூழலில், இந்த நடிகையுடன் ஜோடி சேர போகிறேன் என்று சங்கீதாவிடம் முன்கூட்டியே சொல்லி, மனைவியின் அனுமதியோடுதான் விஜய் நடித்து வந்தார்.

குடும்ப கட்சி:

இப்போது கட்சி துவங்கியிருக்கும்நிலையில், அப்பா, அம்மாவைகூட கட்சியில் சேர்க்கவில்லை. இது ஒன்றும் குடும்ப கட்சி இல்லை என்கிறார்… ஆனால், விரைவில் விஜய்க்காக, திரிஷா தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுவார் என்றும் சலசலக்கப்படுகிறது” என்றெல்லாம் அந்தப் பேட்டியில் சொல்லி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

 

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *