
வீர தீரா சூரன்: பாகம் 2 இயக்குனர் S.U. அருண்குமார் எழுதி இயக்கியுள்ளார். சீயான் விக்ரம் , S.J. சூரியா, துசாரா விச்சயன், சூரஜ் வெஞ்சரமூடு, பாவெல் நவகீதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரியா சுபு தயாரித்த இந்த படத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி. கே எடிட்டிங் செய்துள்ளார். சமீப காலமாகவே அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் – யின் பாடல்கள் தான் அதிகம் இடம் பெறுகின்றன.

வீர தீரா சூரன்: பாகம் 2 காளி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இவர் ஒரு மளிகை கடை உரிமையாளர், அன்பான கணவன் மற்றும் தந்தையுமானவர். காலி எதிர்பாராத சூழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறார், அவரையும் அவரது குடும்பத்தையும் பாதுகாக்க காளி ஒரு மர்மமான பணியில் ஈடுபடுகின்றார், ஒரு கட்டத்தில் உண்மைகள் வெளிவர நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான காளியின் போராட்டம் தீவிரமடைகிறது. காளி இந்த சூழ்சியில் இருந்து தப்பிட்டாரா? அவரது குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பதே மீதி கதை.
வீர தீர சூரன் பகுதி 2 தான் முதலில் வெளிவர இருக்கிறது . விக்ரமின் படங்கள் சமீபகாலமாகவே சரியாய் ஓடவில்லை , தங்கலான் படம் சொல்லிக்கொள்ளும் அளவு இருந்தது, இந்த படத்திற்கு அதிகமான வரவேற்பு இருந்தது . கலவையான விமர்சனங்களையே மக்கள் மத்தியில் பெற்றது . அதற்கு அடுத்தபடியாக வீர தீர சூரன் பகுதி 2 நாளை வெளியாக உள்ளது , படம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாக்கலாம். ஒருவழியா ரிலீஸ் தேதி வந்தாச்சு..! இனி விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.!



