
டெல்லியில் மத்திய அரசு பண்டிகைக் காலம் வருவதை ஒட்டி மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக 1,01,603 கோடி ரூபாய் மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. அக்டோபர் 10 ஆம் தேதி வழங்கப்படவிருந்த நிதியை பத்து நாட்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்க்கு 4,144 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அதிகபட்சமாக வரிப் பகிர்வாக 18,227 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்துக்கு 10,219 ரூபாய் கோடியை ரூபாய் வரிப் பகிர்வாக அறிவித்துள்ளது.
