Umar Rali: “உமரே உம் உயிரை விட”

ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்…

நான் அல்லாஹ்வின் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியமாக எல்லா பொருளைவிட என்னிடத்தில் நீங்களே பிரியமானவர் என் உயிரைத் தவிர என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமரே உம் உயிரைவிட என்மீது அதிகம் நேசம் வைக்கும் வரை நீர் உண்மை இறை நம்பிக்கையாளராக ஆகமாட்டீர் என்று கூறினார்கள்.

அதற்கு உமர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே என் உயிரைவிட என்னிடத்தில் நீங்களே மிகவும் பிரியமானவர் என்று உரைத்தார்கள் அப்போது தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமரே நீர் உண்மையான இறை நம்பிக்கையாளராக ஆகி விட்டீர் என்று கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *