உக்ரைன் – ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தங்களின் அனுமதியின்றி ஈரான் எதையும் செய்வதில்லை என்றும், அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான எந்தவொரு செயலுக்கும் அமெரிக்காவின் ஒப்புதல் ஈரானுக்குத் தேவைப்படும் என்றும் தெரிவித்தார். வரும் வாரங்களில் முக்கிய முடிவுகள் எதிர்பார்க்கப்படலாம் என்றும் கூறினார்.
மேலும் ரஷ்ய அதிபரின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரியேவைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு எட்டப்படும் என்றும், இது ஒரு பெரிய ஒப்பந்தமாக இருக்கும் என்றும் கூறினார்.
இதில் உக்ரைனைத் தாண்டி பல நாடுகள் ஈடுபடும் என்று தெரிவித்தார். எனவே உக்ரைன்-ரஷ்யா போர் தீர்வு காண்பதற்கு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


