உக்ரைன் மீது ஏவுகணை மழை.. மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா!

Advertisements
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டு களை கடந்தும் தொடர்கிறது.இரு தரப்பும் பேச்சில் ஈடுபட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்கிறது. இந்த சூழலில், உக்ரைன் மீது நேற்று திடீர் வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது.ஒரே நேரத்தில் 120 ஏவுகணைகள், 90 ‘ட்ரோன்’கள் வீசப்பட்டதில், உக்ரைன் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது.

தலைநகர் கீவ், முக்கிய நகரங்களான வொலைன், மைகொலைவ், ஜபோரிச்சியா, துறைமுக நகரமான ஒடேசா உள்ளிட்ட பகுதிகளில் குண்டு மழை பொழிந்தன.அங்குள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகளை ரஷ்யா வீசியது.கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களால், மூன்று பிராந்தியங்களில் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெத் வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா இந்த தாக்குதலில் பயன்படுத்தியுள்ளது.இதில், 100க்கும் மேற்பட்டவை வானிலேயே அழிக்கப்பட்டன.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் இன்று உச்சத்தை தொட்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. சரமாரியாக ஏவுகணைகளையும், 500 ட்ரோன்களையும் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு F-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட்,  கூறுகையில், “இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாக இது இருந்தது. டிரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ரஷ்யா-ஈரான் தயாரிப்பான ஷாஹெட் வகை ட்ரோன்கள் 477 எங்களை தாக்கின. 60 ஏவுகணைகள் பல்வேறு திசைகளிலிருந்த ஏவப்பட்டதால், இரவு முழுவதும் எச்சரிக்கை அலாரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. எங்கள் உயிரைக் காக்கும் அனைத்தையும் குறிவைத்து ரஷ்யர்கள் தாக்கினார்கள். எங்களது F-16 விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ, நாட்டை பாதுகாக்கும் பணியின்போது உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினருக்கும் சக வீரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாரத்தில் மட்டும் 114 ஏவுகணைகள் மற்றும் 1,270 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகள் அமைதிக்காக அழைப்பு விடுத்தாலும், புடின் போரைத் தொடர முடிவு செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக விளாடிமிர் புடின் கூறியிருந்தாலும், அமெரிக்கா தலைமையிலான அமைதி முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை. இரு தரப்புகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளன.

ரஷியா மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை நள்ளிரவில் ஏவி உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இவ்வளவு உக்ரைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் கூறினார்.சைட்டோமிர் பகுதியில் இறந்தவர்களில் 8, 12 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறார்கள் அடங்குவர்.க்மெல்னிட்ஸ்கியில் நான்கு பேரும், மைக்கோலைவில் ஒருவரும் இறந்ததாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. மார்கலிவ்கா கிராமத்தில் பல வீடுகள் தரைமட்டமாயின.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *