மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விலைவாசி உயர்வைக் கண்காணித்து உரிய நேரத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதன் விளைவாக, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 7.29 சதவிகிதமாக சில்லறை பணவீக்கம் உயர்ந்து, இந்தியாவிலேயே விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மை நிலவரத்தை மூடி மறைப்பதிலேயே முனைப்பு காட்டிய தவெக அரசு, அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் எனப் பெருமை பேசுவது, “உயிரோடு இருக்கும்போது உதவ மறுத்துவிட்டு, இறந்த பிறகு ஒப்பாரி வைப்பதைப் போல” உள்ளது என்று விமர்சித்துள்ளார். திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை அதல பாதாளத்திற்கு தள்ளிவிட்டு “வளமிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்கிடுவோம்” என முதலமைச்சர் ஜோசப் விஜய் எந்த நம்பிக்கையில் அறைகூவல் விடுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

