நவீன, வளர்ந்த, முன்னேறிய இந்தியாவைக் கட்டமைப்பதே ஜவகர்லால் நேருக்குச் செலுத்தும் அஞ்சலி என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 138ஆவது பிறந்த நாளையொட்டி ராகுல்காந்தி செய்தி வெளியிட்டுள்ளார். அதில் விடுதலை என்பது இறுதியானது அல்ல என்றும், நம் நாட்டின் நீண்ட பயணத்தின் ஒரு மைல் கல்லே என்று தெரிவித்துள்ளார்.
தன்னாட்சி என்பது அதிகாரம் பற்றியது இல்லை என்றும், இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பங்களிப்பும் பொறுப்புமேஎன்றும் தெரிவித்துள்ளார்.
நவீன, அறிவியல் வளர்ச்சிபெற்ற, முன்னேறிய, தன்னம்பிக்கையுள்ள இந்தியா பற்றிய நேருவின் கனவு இன்றைக்கும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய இந்தியாவைக் கட்டமைப்பதற்கான முயற்சிகளே நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

