கேரளாவில் சோகம்..தமிழர்கள் 3 பேர் பலி..!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உணவகத்தில் கழிவறைத் தொட்டியில் சிக்கிக் கொண்ட தேனி மாவட்டத் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ஜெயராமன், கூடலூரைச் சேர்ந்த மைக்கேல், சுந்தர பாண்டியன் ஆகியோர் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை என்னும் ஊரில் உணவகத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு பத்து மணிக்குக் கழிவறைத் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்வதற்காக உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் மூவரும் அதில் சிக்கி உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினரும் குறுகிய ஆள்துளை வழியே அவர்களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து பொக்லைனைக் கொண்டு தோண்டிய பின் மூவரின் உடல்களும் வெளியே எடுக்கப்பட்டன. மூவரின் உடல்களும் கூறாய்வுக்காகக் கட்டப்பனை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *