Today’s rasipalan:இன்றைய ராசிபலன்:24.07.2024

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாகக் காணப்படும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும் அலுவலகசுழல் மிகவும் சிறப்பானதாகவும், வெற்றி அளிக்கக்கூடியதாகவும் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். நிதிநிலையை பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் அளவுக்கு அதிகமாகக் காணப்படும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சுறுசுறுப்பு மிக்க நாளாக அமையும். அதனால் சிறப்பானதாக மாற்றுவீர்கள். செய்யும் பணியினை சிறப்பாகவும், அனைவரை விடக் குறைவான நேரத்திலும் செய்து முடிப்பீர்கள். இதுநாள் வரையிலும் காணப்பட்ட சங்கடங்கள் நீங்கிக் கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரித்து காணப்படும். பொருளாதார நிலை ஆனது உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவில் இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. ஆகையால் ஆன்மீக பணியில் ஈடுபடுவது மற்றும் பாடல்கள் கேட்பதன் மூலம் மன அமைதி உண்டாகும். வழக்கத்திற்கு மாறாகப் பணிகள் இருப்பதால் அதனைத் திட்டமிட்டு கவமனாகக் கையாளுவது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது. ஆகையால் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலசுழல் திருப்தி அளிக்கும் நிலையில் இல்லாத காரணத்தினால் சற்று விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது மனா அமைதியினை அளிக்கும். மிகவும் குறைவான அளவே பண வரவு காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை நிறைந்த நாளாகக் காணப்படும். உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது துணையிடம் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். போதுமான அளவு நிதிநிலை காணப்படும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக அமையும். மிகவும் குறைவான நேரத்தில் உங்களுக்கான பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் அனைவருக்கும் முன் உதாரணமாகவும் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து துணையுடன் புரிந்துணர்ந்து அதிகமாக உண்டாகும். பொறுத்தவரை பணம் இன்று தேவையைவிட அதிகமாக இருக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு விருப்பமான நாளாக இருக்காது. அதனால் கவனம் மிகவும் அவசியம். உங்களுக்கான வேலையினை சிறப்பாக முடிக்க வேண்டும் என்றால் திட்டமிடுதலும், கவனமும் இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும். உங்களது துணையிடம் அனுசரித்து சென்றால் மட்டுமே வீண் விவாதங்களைத் தவிர்க்கலாம். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகமாக அமையக்கூடிய நாளாக இருக்கும் .

விருச்சிகம்


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சற்று சீரான நாளாகவே அமைகிறது. ஆகையால் எதையும் சிந்தித்து செய்வது நல்லது. மேலும் பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு விடாமுயற்சி அவசியம். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு இழந்து காணப்படும். பண வரவு குறைவாக இருந்தாலும் கூடப் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக உள்ளது. பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்து பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வை அதிகரித்து கொள்வீர்கள். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து சந்தோசகமாக இருப்பீர்கள். நிதிநிலை எந்தப் பிரச்சனையும் இருக்காது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்குசற்று சீரான நாளாக இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்தல் வேண்டும். வழக்கத்திற்கு மாறாக வேலை இருப்பதனால் அதனைச் சரியான முறையில் முடிக்கச் சக ஊழியர்களிடன் அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் பொறுமையாக இருப்பதனால் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பண வரவு குறைவாக இருப்பதால் தேவையற்ற செலவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்குகவலை அளிக்கும் நாளாகக் காணப்படும். அதனால் மனதிற்கு பிடித்ததை செய்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அலுவகத்தில் உங்களுக்கு இருக்கும் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மனக்கசப்புகளை அளிக்கும். உங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவில் மட்டும் நிதிநிலை இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு வெற்றி அளிக்கும் நாளாக இருக்காது. அதனால் பொறுமை மிகவும் அவசியம். பணியிடத்தில் உங்களின் வேலையினை சரியான முறையில் செய்து முடிப்பதன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதலின்றி வீண் வாக்குவாதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்தை காட்டிலும் மிகவும் குறைவான அளவில் நிதிநிலை இருக்கும். ஆகையால் பண விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *