இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தில் கடந்த 3நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து நேற்று சவரன் 58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையாகிறது.

நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *